நாடகக் கலையின் நுட்பங்கள் இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. சொற்களைப் பயன்படுத்தி கருத்தை வெளிப்படுத்துவது, சொற்களின் பயன்பாடின்றி உடல் மொழியின் மூலம் கருத்தை உணர்த்துவது போன்ற நுட்பங்கள் மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகின்றன. அத்துடன் ஒரு பாத்திரத்தை உருவாக்குவது, சம்பவங்களை கோர்வையாக்குவது போன்ற நாடக உருவாக்கத்தின் நுட்பங்கள் பற்றியும் பயிற்சியளிக்கப்படுகிறது.