எலும்புகள் இணையும் இடங்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சரி செய்வதில் இந்த கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கை,கால்களில் ஏற்படக்கூடிய முறிவுகள், போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள்,பிறவிக் குறைபாட்டுடன் உடையவர்கள், விகாரமான தோற்றம் கொண்டவர்கள், முதுகு தண்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுந்து நடக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கும் உதவி செய்ய இந்த டிப்ளமோ படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. மேலும் நோயாளிகளின் குறைகளையும், தனிப்பட்ட தேவைகளையும் அறிந்து அதற்கேற்ப செயல்பட உதவுகிறது.