கட்டடக்கலை, விளையாட்டு, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு தேவையான தனிப்பட்ட வகை ஆடைகளை உற்பத்தி செய்யும் துறையில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த துறையில் எந்திரவியல், மின்னியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் பயன்பாடும் அதிகம் என்பதால், இவற்றிலும் மாணவர்களுக்க பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு பெரிய ஆடை நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.