இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.பி.ஏ.வில் இன்ப்ராஸ்ட்ரக்சர் படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். இந்த இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பில், நடைமுறைப்படுத்துதல், கொள்கை உருவாக்கம், பொருளாதாரம், சமுதாயம், சட்டம் மற்றும் அரசியல் கட்டமைப்பு என பல வகையான கட்டமைப்புகள் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
கேட் மட்டுமல்லாமல் மேட், ஜிமேட், ஜேமேட் போன்ற பல தேர்வுகளையும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நடத்தி அதன் மூலம் மாணவ சேர்க்கையை நடத்துகின்றன.
டெல்லியில் உள்ள டிஇஆர்ஐ பல்கலைக்கழகம் இந்த படிப்பினை வழங்குகின்றது.
இப்படிப்பை முடித்தவர்கள் பொருளாதார நிபுணராகலாம், வங்கியியல், தொழிற்கூடம், தொழிற் நிர்வாகம் மற்றும் அதற்கு தொடர்பான பணிகளில் வேலைகள் உள்ளன. இந்த துறையிலேயே மேற்கொண்டு எம்.பில், பிஎச்.டி. பயிலலாம்.