மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் நர்சிங் படிப்பு இரண்டு ஆண்டு கால முதுகலை பட்டப்படிப்பாகும். நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்தல், பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து கற்பிக்கும் இரண்டு ஆண்டுகளைக் கொண்ட பட்டப்படிப்பாகும் இது. சில பல்கலைக்கழகங்கள் இதனை பகுதி நேர படிப்பாகவும் வழங்குகின்றன.
பி.எஸ்சி. இளநிலை பட்டப்படிப்பை ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் முடித்திருக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் பி.எஸ்சி. படித்திருக்க வேண்டும். இந்த படிப்பில் சேரவும் சில கல்லூரி/பல்கலைகள் நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன.
கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இப்படிப்பை வழங்குகின்றன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜுகேஷன், ஜமையா ஹம்தார், எம்எம் காலேஜ் ஆப் நர்சிங், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ காலேஜ் ஆப் நர்சிங் இப்படிப்பை வழங்குகிறது.
வேலை வாய்ப்பு
மருத்துவமனை, பாதுகாப்பு மையம், கல்வி நிறுவனம் போன்ற பல துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்திய செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.