பொறியியல் பாடப்பிரிவுகளில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு காரணமாக ஆட்டோமொபைல் தலைநகரமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை உருவாகி வருவதையும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் பி.இ., பிடெக்., எம்.இ., மற்றும் எம்.டெக்., படிப்புகளை படிக்கலாம்.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சில..
* ஐ.ஐ.டி., சென்னை
* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
* ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா
* விஸ்வகர்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே
* அரசு பொறியியல் கல்லூரி, கோட்டயம்
* இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்டு டிரான்ஸ்போர்ட், ஈரோடு
* எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், சென்னை
* பாரத் பல்கலைக்கழகம், சென்னை
* ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை
* இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை