குற்றவியல் நீதி அமைப்புகளில் தடயங்களை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்பதற்கும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் உதவும் வகையில் இந்த முதுநிலை படிப்பு விளங்குகிறது.
இப்படிப்பில் மானிடவியல், வேதியியல், உயிரியல், இயற்பியல் மற்றும் நோய் அறிகுறியியல் போன்ற துறைகளை உள்ளடக்கி உள்ளன. தடய அறிவியல் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும், இத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் போரன்சிக் சயின்ஸ் பல்கலைக்கழம் டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை மற்றும் முதுநிலை போன்ற படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த படிப்பு வருங்காலத்தில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி மற்ற அயல் நாடுகளிலும் தடய அறிவியல் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
தகுதி: இந்த படிப்பிற்கு விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி., பி.டெக், பி.இ, எம்.பி.பி.எஸ், பி.பார்ம்., போன்ற இளநிலை படிப்பு அல்லது எம்.ஏ., எம்.எஸ்சி., உளவியல் போன்ற பாடங்களில் 50௦ சதவித மதிப்பெண் பெற்றவர்களாகவோ இருத்தல் வேண்டும்.