இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலை அல்லது கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பை முடித்தவர்கள் மட்டுமே எம்.டி.எஸ். படிப்பில் சேர முடியும். பிடிஎஸ் முடித்ததும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பதும் அவசியமாகிறது.
எம்.டி.எஸ். பல் திசுயியல் படிப்பில், பற்களைச் சுற்றியுள்ள திசுக்களைப் பற்றியும், திசுக்கள் பற்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து கற்பிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு
எம்.டி.எஸ். முடித்தவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றலாம், மேற்கொண்டு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை உதவித் தொகையுடன் செய்யலாம், பல் மருத்துவத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி.எஸ். கல்வி அளிக்கப்படுகிறது.