எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் டி.எம். நியூராலஜி படிப்பை படிக்க முடியும். மருத்துவம் படித்தவர்கள் மேற்கொண்டு மருத்துவ முதுநிலை படிப்பில் சேர இப்படிப்பை தேர்ந்தெடுப்பார்கள்.
3 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் சேர எம்.டி. டிகிரி முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களையே இப்படிப்பில் சேர்த்துக் கொள்கிறது.
கிளினிக்கல் பயிற்சி, வகுப்பில் அடிப்படை கற்றல், கருத்தரங்குகள், செய்தியாளர்கள் சங்கங்களுடன் சந்திப்பு போன்றவை அடங்கியதாக இப்படிப்பு இருக்கும்.
இப்படிப்பு காலத்தில் நியூரோசர்ஜரி, பிசிக்யாட்ரி, நியூரோபாதாலஜி, ரேடியாலஜி, நியூரோபிசிகாலஜி என ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத் துறையில் கல்வி பயில வேண்டும்.
இப்படிப்பை முடித்தவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்றலாம். வெளிநாடுகளிலும் நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன.