எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் டி.எம். கார்டியாலஜி படிப்பில் சேரலாம். 2 முதல் 3 ஆண்டுகள் கொண்டதாக இந்த முதுநிலை மருத்துவப் படிப்பு அமைகிறது. இது கல்வி நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடும்.
இதயம் மற்றும் இதயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இப்படிப்பு வழங்குகிறது. கல்லூரி வகுப்புகள், நேரடி பயிற்சி, கருத்தரங்குகள் என இப்படிப்பு அமைகிறது. கார்டியாலஜி துறையில் வந்துள்ள புதிய கருவிகள், நவீன அறுவை சிகிச்சைகள், சிகிச்சை முறைகள், ஆராய்ச்சி என இப்படிப்பில் அடங்கும்.
இப்படிப்பை முடித்தவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றலாம்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன.