இக்னோ பல்கலைக்கழகம் எம்.பி.ஏ.,(டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட்) படிப்பை வழங்குகிறது. கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷன்ல் இன்ஸ்டிடியூட் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இக்னோ இப்படிப்பை வழங்குகிறது.
டெக்ஸ்டைல் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இப்படிப்பு துவக்கப் பட்டுள்ளது. வகுப்புகள் அனைத்தும் சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷன்ல் இன்ஸ்டிடியூட் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நடைபெறும். ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணபிக்கலாம்.
30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குழு விவாதம் மற்றும் நேரடி தேர்வு மூலம் மாணவர்கள் இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர். 2011 ஜனவரியில்
துவங்கும் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 0452 2370 733 என்ற இக்னோவின் மதுரை கிளை தொலைபேசி எண் ணையும், 98940 97698
என்ற சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.