மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் (எம்.இ.) என்று மிகப் பிரபலமாக அறியப்படுவது முதுகலை பொறியியல் படிப்பாகும். 4 ஆண்டுகளைக் கொண்ட பி.இ. படித்து முடித்த பிறகு மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதுதான் பி.இ.எம்..இ. படிக்க பி.இ. முடித்திருக்க வேண்டியது அவசியம்.
எம்.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை பெற வேண்டும். அண்ணா பல்கலை, அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இப்படிப்பை அளிக்கின்றன.
எம்.இ. என்பது பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டதாகும். பி.இ. (இளநிலை பொறியியல்) படிப்பில் ஒரு மாணவர் எடுத்துப் படித்த பாடப்பிரிவை அடிப்படையாகக் கொண்டு எம்.இ. பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்.
எம்.இ. முடித்தவர்கள் தொழில்நுட்பத் துறையில் மிக உயரிய பதவிகளில் பணியாற்ற முடியும். பிச்.டி.யும் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகங்கள், மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் அல்லாமல் பல நூற்றுக்கணக்கான சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இப்படிப்பை அளிக்கின்றன.