இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலை அல்லது கல்லூரியில் பி.டி.எஸ். (இளநிலை பல் அறுவை சிகிச்சை) படிப்பை முடித்தவர்கள் மட்டுமே எம்.டி.எஸ். படிப்பில் சேர முடியும்.
பி.டி.எஸ். முடித்ததும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பதும் அவசியமாகிறது.
பி.டி.எஸ். படிப்பில் பல் நோய் மற்றும் சிகிச்சை முறைகளைப் படிப்பதைத் தொடர்ந்து எம்.டி.எஸ். படிப்பில் கற்பித்தல், ஆய்வு செய்தல், சிறப்பு பயிற்சிகள் தொடர்பாக கற்பிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு
எம்.டி.எஸ். முடித்தவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றலாம், மேற்கொண்டு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை உதவித் தொகையுடன் செய்யலாம், பல் மருத்துவத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி.எஸ். கல்வி அளிக்கப்படுகிறது.