அருங்காட்சியகம் பற்றிய நுணுக்கங்களும் அதன் வளர்ச்சி மற்றும் இயக்க முறை பற்றியும், சமூகவியல் மற்றும் அரசியல் தொடர்பான வரைமுறைகள் பற்றியும் விரிவாக இந்த பாடப்பிரிவில் கற்பிக்கப்படுகிறது. இது இரண்டு வருட படிப்பு கல்லூரி மற்றும் தொலைநிலை கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது.
தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டபடிப்பில் வரலாறு, பண்பாடு, சமூகவியல், சமஸ்கிரிதம், ஹிந்தி, உருது, ஆங்கிலம், நுண் கலை, மனித இயல் போன்ற துறை பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் கல்வி நிறுவனம்:
பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வாரணாசி
ஜிவாஜி பல்கலைக்கழகம்
ராஜஸ்தான் பல்கலைக்கழகம்
நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிஸ்டரி ஆப் ஆர்ட்ஸ்
வேலைவாய்ப்பு:
இந்த துறையில் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம், சுற்றுலா போன்ற எண்ணற்ற வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றவாறு வழங்கப்படுகிறது.