ஆசியாவிலேயே ஸ்பேஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெயரையும், விண்வெளி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) பெற்றுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இப்படிப்பு அமைந்துள்ளது.
பொதுவாக இந்த பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்படும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணும், பொது அறிவுத் திறனும் அதிகம் பெற்ற மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்த சாதனை படைக்கலாம்.