மசாஜ், உடற்பயிற்சி, வெப்பம் அல்லது மின்சாரம் மூலம் சிகிச்சை அளித்தல் போன்ற முறைகளைக் கற்றுத் தரும் பாடம் பிசியோதெரபி. இழந்த செயல்பாடுகளை மீட்டுத் தர உதவுதல், இயற்கையான சுவாசத்திற்கு உதவி செய்தல் போன்றவையும் இந்தப் பணியில் அடங்கும். வலியைப் போக்குதல், இயக்கங்களை மீட்டெடுத்தல், தசையின் ஆற்றலை மீட்டல், நோயாளிகளைத் தமது அன்றாட இயல்பு வாழ்விற்கு மீட்டு வருதல் போன்றவை இவர்களது பணிகளில் அடங்கும். பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், ஆலோசனை வழங்குதல், அறிவுறுத்தல், போன்றவை மூலம் இவர்கள் தங்களின் பணிகளைச் செய்வார்கள்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். அத்துடன் ஆறு மாத பயிற்சி காலமும் உண்டு. இதே பிரிவில் முதுகலை உண்டு.