ஆசியாவிலேயே ஸ்பேஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெயரையும், விண்வெளி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) பெற்றுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பி.டெக். படிப்பில் 3 பாடப்பிரிவுகளின் கீழ் விண்வெளி டிப்பு வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணும், பொது அறிவுத் திறனும் அதிகம் பெற்ற மாணவர்கள் ஐ.ஐ.எஸ்.டி.யில் இப்படிப்பை தேர்வு செய்து சாதனை படைக்கலாம்.
பிளைட் மெக்கானிக்கல், தியரி ஆப் மெக்கானிக்ஸ், ஏரோ ஸ்பேஸ் ஸ்ட்ரக்சர், மேனு பேக்சரிங் பிராசஸ், ஆட்டோமெடிக் கன்ட்ரோல் ஆகிய துறைகள் இப்படிப்பில் கற்பிக்கப்படுகிறது. இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஏவுகணைகள், ராக்கெட்கள், விமானம், செயற்கைக்கோள் போன்றவை தயாரிப்பது, வடிவமைப்பு, அவற்றில் பணியாற்றுவதற்கான அனைத்து சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.
4 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் விண்வெளித் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளாக சாதனை படைக்கலாம்.