விலங்கியல் என்பது உயிரியலின் ஒரு பிரிவு. விலங்குகளின் உயிரியல், மற்றும் அடையாளங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் விலங்கியல் எனப்படுகிறது. விலங்கு உயிர் தொழில் நுட்பம் என்பது விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் மரபணுக்களை கொண்டு புதிய உற்பத்தி முறைகளை உருவாக்குவது பற்றிய அறிவியல். சான்றாக, ஒரு மீனுடைய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களைக் கொண்டு, மனித முயற்சியால் புதிய மீன்களை உருவாக்குவது. மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பத்தில் தேவையான பயிற்சிகளை இந்த இளநிலை படிப்பு மூலம் மாணவர்கள் பெறலாம்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.