பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் எனப்பம் பி.ஏ.வில் பழங்கால இந்திய வரலாறு ஒரு பாடப்பிரிவாக அமைந்துள்ளது. மூன்று ஆண்டுகள் பயிலும் இந்த இளநிலை பட்டப்படிப்பில், இந்தியாவின் பழங்கால வரலாறுகள் குறித்து விரிவாக மாணவர்கள் பயில்வார்கள்.
கல்லூரியில் சேர்ந்தோ அல்லது தொலைதூரக் கல்வி முறையிலோ மாணவர்கள் இந்த பட்டப்படிப்பை பயிலலாம்.
இந்தியா 1206 ஆம் ஆண்டு வரை வரலாறு, 1206க்குப் பின்னான வரலாறு என இந்தியாவின் வரலாற்று ஏடுகளைக் கொண்டதாக இந்த பாடப்பிரிவுகள் அமையும்.
கல்வித் தகுதி - பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் பி.ஏ. சேரலாம்.
கல்வி நிலையங்கள் - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழம் ஆகியவை பி.ஏ.பழங்கால இந்திய வரலாறுப் பாடப்பிரிவை வழங்குகிறது.
வேலை வாய்ப்பு
தொல்லியல் துறை, அருங்காட்சியகம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணி போன்றவை பி.ஏ. பழங்கால இந்திய வரலாறு படித்த பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பை அளிக்கிறது.