பாஷன் துறை மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்கேற்ப ஆடைகளை வடிவமைப்பது, பாஷன்களை உருவாக்குவது போன்ற பணிகள் பற்றிய படிப்பு ஆடை மற்றும் பாஷன் தொழில் நுட்பம் எனப்படுகிறது. மிகவும் பரந்துபட்ட பாஷன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை கவனத்தில் கொண்டு இதன் பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. ஆடை உற்பத்தி, தையல் வேலைப்பாடுகள், டிசைனிங், பாஷன் ஸ்கெட்சிங், மார்க்கிங், கட்டிங், நவீன தொழில் நுட்பதைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைப்பாடுகள் போன்றவை பற்றி செய்முறைப்பயிற்சி மற்றும் பாடத்திட்டம் வாயிலாக இந்த இளநிலைப் படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.