நூலக மற்றும் தகவல் அறிவியல் படித்த மாணவர்களுக்கான தேவை இன்று அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் புத்தகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நுலகங்களில் இன்று கம்ப்யூட்டரின் வரவால் ஆன்லைன் தகவல் தொகுப்புகளும் ஒரு அங்கமாக விளங்குகின்றன. நூலக நிர்வாகத்தில் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வெளியே செல்லும் மற்றும் உள்ளே வரும் புத்தகங்கள் மற்றும் தகவல் தொகுப்புகள் பற்றி உடனே அறிந்து கொள்ள முடியும். நூலக அறிவியல் பாடத்தில் மின்னணு நிர்வாகத்துக்கான சாப்ட்வேர்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.