மீன் வள நிர்வாகம் மற்றும் மீன்கள் பற்றிய அறிவியலே மீன்வள அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. பண்ணைகளில் மீன் வளர்க்கும் முறைகள் முதல் கடலில் மீன்கள் இருக்கும் இடங்களை அறிவது வரையிலான பல்வேறு தொடர்புடைய பாடங்கள் இப்பிரிவில் இடம்பெறுகின்றன. உயிரியல், சுற்றுச்சூழலியல், கடலியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாகத் துறைகளும் இப்பாடப்பிரிவில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.