பிரான்ஸ் நாட்டிலும், அந்நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த நாடுகளிலும் பிரெஞ்சு மொழி அதிகளவில் பேசப்படுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் பிரெஞ்சு மொழி இலக்கியங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இம்மொழி இலக்கியங்கள் மற்றும் இலக்கணம் பற்றி இந்த இளநிலைப் படிப்பில் கற்றுத்தரப் படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.