எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பற்றியதும் குறித்த படிப்புதான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன். எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதையும் அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இப்படிப்பு மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும். தொழில் நிறுவனங்கள், மின் நிலையங்கள், உரம் மற்றும் இரும்பு, ரசாயன ஆலைகளில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.