ஓராண்டு காலம் படிக்கும் படிப்பாகும் இது. ஹிந்தியில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடி வகுப்புகளில் பி.எட். சேர்ந்து பயிலலாம். இப்படிப்பை முடித்தவர்கள் பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். வீட்டிலிருந்தே மாணவர்களுக்கு ஹிந்தி கற்பித்தும் சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாக்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. அங்குள்ள ஹிந்தி வகுப்புகளில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்த பிறகு பி.எட். வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இப்படிப்பிற்கு வேலை வாய்ப்பு உள்ளது.