வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது குறித்த படிப்பே எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங். இந்த செயல்முறைக்கு தேவையான வடிவமைப்பு, கட்டமைப்பு, கட்டுப்பாடு, திட்டமிடல் போன்றவை குறித்தும் இந்த படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
வேதி ஆற்றல் மின் ஆற்றல் இடையேயான தொடர்பு, மின்வேதியியலில் அடிப்படை குறித்தும் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் விளக்குகிறது. பியூயல் செல்ஸ், பயோ சென்சர்ஸ், எலக்ட்ரோ கெமிக்கல் சென்சார், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற வளரும் துறைகளில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.