ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாக படிப்பானது வாடிக்கையாளர் சேவையை முன்னிலை படுத்தி பயிற்சி அளிக்கப்படும் தொழில் படிப்பாகும். இந்த படிப்பபை மேற்கொள்ளும் மாணவர்கள் ஓரளவு நல்ல தோற்றமுடையவராகவும், பல மொழிகளில் பேசக்கூடிய திறமை, சிறந்த பழகும் முறை, தன்னம்பிக்கை உடையவராகவும் இருப்பது அவசியம். இந்த படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பணியாற்ற தனியார் ஹோட்டல்களில் வாய்ப்பு அளிக்கப்படுவார்கள். இவர்கள் மேற்கொள்ளும் நேரடிப்பயிற்சி- அடிப்படையில் இவர்களின் செயல்பாடு கணித்து மதிப்பெண் வழங்கப்படும்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.