பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் பட்டப்படிப்பில் மிகவும் பிரபலமானதும், ஏராளமான மாணவர்களால் தேர்வு செய்யப்படுவதும் பி.ஏ. (ஹானர்ஸ்) ஆங்கிலப் பட்டப்படிப்பாகும்.
ஆங்கில மொழியின் ஆழம் வரைச் சென்று அதன் நுணுக்கங்களை அறிவதும், ஆங்கில இலக்கியம் பற்றி அறிவதுமே பி.ஏ. (ஹானர்ஸ்) ஆங்கிலப் பட்டப்படிப்பின் அடிப்படையாகும்.
பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருப்பது அல்லது இதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, இப்படிப்பில் சேரத் தகுதியானதாகும்.
கல்வி நிலையங்கள் - ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி, காய்தே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, ஸ்ரீ அரபிந்தோ கல்லூரி, ஸ்ரீ குருநானக் தேவ் கால்சா கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
பி.ஏ. (ஹானர்ஸ்) ஆங்கிலம் முடித்த மாணவர்கள், மேற்கொண்டு முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் ஆங்கில மொழிப் புலமையைப் பெறலாம்.
வேலை வாய்ப்பு - பேராசிரியர் அல்லது ஆசிரியர் பணியில் ஈடுபடலாம். சிறந்த ஆங்கில நாளிதழ், வார இதழ் போன்றவற்றில் பணியாற்றும் வாய்ப்பும் கிட்டும்.