எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகளை அடுத்து மாணவர்களால் அதிகமாக விரும்பப்படும் படிப்பு இது. மின் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களிலும் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.
சான்ட்விச் பாட முறையில் படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்புக் காலத்தில் தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சி பெறுவார்கள்.