வரலாறு என்பது நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு. பழைய சம்பவங்களை தற்போதைய சமூகமும், தற்போதைய சம்பவங்களை எதிர்கால சமூகமும் அறிந்து கொள்வதற்கு வரலாறு தான் உதவுகிறது. தனி நபர், சமூகம், நாடு மற்றும் உலகத்தை புரிந்து கொள்ள வரலாறு மிகவும் பயன்படுகிறது. சுற்றுலா மேலாண்மை படிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவை ஆகியன பற்றி மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இது தவிர, சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.