தொழில், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒருவர், தன்னுடைய சொந்த ஊரிலிருந்து, வேறு பகுதிகளுக்கு சென்று ஓராண்டுக்கு மிகாமல் தங்கியிருப்பதை சுற்றுலா என்று வரையறை செய்கின்றனர். இந்த இளநிலைக் கல்வியில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள், சுற்றுலா தலங்களின் புவியியல் அமைப்பு, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா தலங்களின் விபரங்கள், பயணச் செலவுகள் போன்றவற்றை செய்முறைப் பயிற்சியுடன் கற்றுத் தருகிறார்கள்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.