ஹிந்தி மொழியை பட்டப்படிப்பு நிலையில் கற்கும் பாடப்பிரிவே பி.ஏ. (ஹானர்ஸ்) ஹிந்தியாகும். இதனை இந்தியாவின் வட பகுதியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
தகுதி - பிளஸ் 2 வில் ஹிந்தி மொழியை எடுத்து படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சில கல்வி நிலையங்கள், நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகின்றன.
3 ஆண்டுகள் பயிலும் இந்த பி.ஏ. (ஹானர்ஸ்) ஹிந்தி படிப்பில் சேரும் மாணவர்கள் ஹிந்தி மொழியில் புலமை பெற்றிருத்தல் அவசியம்.
பணி வாய்ப்பு - இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்பதால் இங்கு ஹிந்தி படிப்பிற்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஹிந்தி பத்திரிக்கை, வார இதழ்கள் போன்றவற்றிலும், ஆசிரியர் வேலையும், ஏராளமாக உள்ளன.
ஹிந்தி மொழி பெயர்ப்பு வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்யும் வாய்ப்பும் கிட்டலாம். உயர் கல்வி கற்று பேராசிரியராகவும் பணியாற்றலாம்.