இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில், புவி சார்ந்த இடங்கள் குறித்து ஆராய்ந்து கற்கும் துறைக்கு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் என்று பெயர். மாநகரத் திட்டமிடல், சுற்றுச் சூழல் நிர்வாகம் போன்றவை முன் எப்போதும் இருந்திராத அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இது தொடர்பான ஏராளமான தகவல்களும் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை வகை தொகைப்படுத்தி, எல்லோரும் எளிதாகப் பயன் படுத்தும் வகையில் அளிப்பதும், அவை அவ்வப்போது அப்டேட் செய்வதும் கட்டாயமான தேவைகள். புவிவெளி ஆய்வு, புவி மாடலிங், புவிவெளி டேட்டாபேஸ்களை உருவாக்குதல் போன்றவற்றை பயிற்றுவிப்பது இந்தப் பாடத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.