உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடல் வளர்ச்சி பற்றி விரிவாக இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. ஹோம் சயின்ஸ் படிப்பில் முக்கியமாக உணவு அறிவியல், அடிப்படை வள மேலாண்மை, மனித மேம்பாட்டுக்கான அடித்தளம், ஜவுளி மற்றும் உடை போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல் இயற்பியல், வேதியியல், உடலியல், உயிரியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம், ஊரக வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு, சமுதாயவியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களும் இப்படிப்பில் இடம்பெறும்.
இதில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, எம்.பில் மற்றும் ஆராய்ச்சி போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
இப்படிப்புக்கான தகுதி:
* +2 வில் ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* சில கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் +2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த பாடப்பிரிவை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1. அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரி, சென்னை
2. அய்மன் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி
3. அண்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சைதாபேட், சென்னை
4. பாரதி இன்ஸ்டிடியூட் ஆப் கேட்ரிங் அன்ட் ஹோட்டல் மேனஜ்மென்ட், தஞ்சாவூர்
5. வித்யா பவன் மஹிலா மஹாவித்யாலயா
6. ஹிந்து கண்யா மஹாவித்யாலாயா