தொன்மையான தொழில்நுட்பங்களில் ஒன்றான செராமிக் தொழில்நுட்பம் உற்பத்தித் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆட்டோமொபைல், சிமென்ட், அணுசக்திப்பொருள்கள், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகாம், மருத்துவக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளில் செராமிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கேற்ற வகையில் செராமிக் டெக்னாலஜி படிக்கும் மாணவர்களுக்குப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செராமிக் தொழில் நிறுவனங்கள், விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் செராமிக் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.