மருத்துவ சாதனங்களை உருவாக்குதிலும் அவை தொடர்ந்து சரிவர செயல்படுகிறதா என்பதைக கவனிப்பதிலும் பயோ மெடிக்கல் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. உயிரியலும் மருத்துவமும் இன்ஜினியரிங்குடன் இணைந்த துறை பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்.
மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும் அதற்கான சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களிலும் இப்படிப்புப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள நவீன மருத்துவக் கருவிகளைப் பராமரிப்பதற்காக பயோ மெடிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். செல்லுலார், டிஷ்யூ இன்ஜினியரிங் துறை ஆய்வு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இத்துறை மாணவர்களுக்கு சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
நான்கு ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம்.