வர்த்தக நிர்வாகத்தில் மாணவர்கள், மானேஜர்கள் போன்றவர்களுக்கு இந்த கோர்ஸ் சிறப்பான பயிற்சி அளிக்கிறது.இவர்கள் இந்த பாடத்திட்டத்தை படிப்பதால் நிர்வாகத்துறை சார்ந்த நிறுவனங்களில், அதிக வேலை வாய்ப்பை பெறமுடியும். மாணவர்கள் தங்கள் தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும். நவீன வர்த்தக உலகில் சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொடர்பான அறிமுகம் மற்றும் பயன்பாட்டு விளக்கம், படித்துமுடித்தவுடன் வேலைக்கு செல்வதை எளிதாக்குகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.