பி.ஏ. கல்சர் அன்ட் ஆர்கியாலஜி படிப்பில் சேர பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இப்படிப்பை அளிக்கின்றன.
நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கம், பாரம்பரியம் மற்றும் கட்டடக்கலை வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய படிப்பாகும் இது. ஒவ்வொரு குறிப்பிட்ட நாடு, பகுதி ஆகியவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரம், கட்டடக்கலை ஆகியவற்றை மிகத் துல்லியமாக இப்படிப்பில் கற்பிக்கப்படும். வரலாற்றுத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்படிப்பு சரியான தேர்வாக இருக்கும். இப்படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்ந்து இத்துறையில் முதுகலை பட்டமும் பெறலாம்.
ஆர்கியாலஜி துறையிலும், நூலகம், ஆசிரியர் துறையிலும் இப்படிப்பை முடித்தவர்கள் பணியாற்றலாம். இப்படிப்பை முடித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது.