இந்த பாடத்திட்டம் வேதியல் மற்றும் உயிர் தொடர்பான உயிரினங்கள் இரண்டுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது. உயிரினங்களுக்குள் அமைந்திருக்கும் வேதியல் செயல்பாடுகள், அவற்றின் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை தெளிவாக தெரிவிக்கிறது.
இந்த பாடம் மாணவர்களுக்கு, புரதப் பொருள்களை சுத்திகரிப்பு செய்து அவற்றின் குணநலன்களை ஆராயும் தன்மையை காட்டுகிறது. புரதப்பொருள்களின் அமைப்பு, செயல்பாடுகளை ஆராய்ந்து, அவை அணுத்துகள்களுடன் இணையும் அறிவியல் சேர்க்கையை உணர இந்த பாடத்திட்டம் உதவுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.
கல்வி நிறுவனங்கள்:
* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி, கோவை
* வைசியா கல்லூரி, சேலம்
* ராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை
* அப்போலோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
* சவுராஷ்டிரா கல்லூரி , மதுரை
* டி.ஜி., வைஷ்ணவ் கல்லூரி, சென்னை
* எத்திராஜ் பெண்கள் கல்லூரி, சென்னை
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
* மீனாட்சி பெண்கள் கல்லூரி, சென்னை