வர்த்தகம் என்பது வணிகத்தின் அல்லது உற்பத்தியின் ஒரு பிரிவாகவே கருதப் படுகிறது. உற்பத்தியாளரிடமிருந்து தொடங்கி இறுதியாக, நுகர்வோர் வரை பொருட்களையோ, சேவைகளையோ பரிமாறிக் கொள்வதைக் குறிப்பதே வர்த்தகம் என்கிறோம். நிறுவன கணக்கு, நிர்வாக மேலாண்மை, நிறுவன தொடர்புகள், விளம்பரம், நிதி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தின் பணிகளை திறம்பட செய்வதற்கு ஏற்ப இத்துறை மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
கணக்கியல், வர்த்தகத்துக்கான கம்ப்யூட்டர் படிப்பு, பொருளாதார பிரச்னைகள் பற்றிய அறிமுகம், பொருளாதார தத்துவங்கள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட பாடங்கள் இப்படிப்பில் இடம்பெறுகின்றன. படிப்பு காலம் மூன்று ஆண்டுகள்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.