அணுக்களின் அமைப்பு, செயல்பாடு குறித்தும், கூட்டுப் பொருட்களில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அவற்றின் குணநலன்கள், பொருட்களுக்கு இடையே ஏற்படும் எதிர்ச்செயல், அதனால் வெளிப்படும் சக்தி பரிமாற்றங்கள், இவற்றை ஒருங்கிணைக்கும் அறிவியல் விதிமுறைகள் தொடர்பான அடிப்படை அறிவியல் ரசாயனமாகும். இந்த பாடத்திட்டத்தில் பொருட்களின் வகைகள், ரசாயன அணுக்களின் அமைப்பு, கூட்டுப்பொருள், ரசாயன எதிர்ச்செயல்கள், திடப்பொருள், திரவம், வாயுக்கள், அணு வேதியியல் முதலிய பிரிவுகளில் பாடங்கள் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.