பல துறைகளில் பணியின் அளவு, இயல்பு வேறுபட்ட சூழ்நிலையிலும் அலுவலக நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவலக நிர்வாகத்தில் கடித பராமரிப்பு முக்கிய பங்கு பெறுகிறது. அலுவலகத்தில் கடிதம் அனுப்புதல்,பெறுதல், கடிதம் எழுதும் முறை, கோப்பு பராமரித்தல், கணக்கு நிர்வாகம் முதலியவற்றுக்கு செயலாளர்களுக்குத் தேவையான செயல் திறன், அறிவை வளர்க்க இந்த கோர்ஸ் உதவுகிறது. வர்த்தக நிறுவனத்துக்குத் தேவைப்படும் அலுவலக நிர்வாகத்துடன் வணிகமும் படித்திருப்பது மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.