உணவுக்கும் உடல் நலனுக்கும் இடையேயான தொடர்பை பற்றி கிளினிக்கல் நியூட்ரிஷியன் படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. செரித்த பின்னர் உணவில் உள்ள சத்துக்கள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை எவ்வாறு சென்றடைகின்றது என்பதை கிளினிக்கல் நியூட்ரிஷியன் படிப்பு விளக்குகிறது.
இது தவிர சுற்றுச்சூழலால் உணவுப்பொருட்களில் ஏற்படும் பாதிப்புகள், அவ்வாறான உணவு பொருட்களை உட்கொள்வதால் உடல்நலனில் ஏற்படும் பாதிப்பு பற்றி கிளினிக்கல் நியூட்ரிஷியன் நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தங்களது ஆய்வுகள் மூலமாக மக்களிடம் சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றனர். உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் முறைகளை அறிந்து கொள்கின்றனர். நோயாளிகள் ஏற்றவாறு உணவு வகைகளை பரிந்துரைக்கின்றனர்.
ஆஸ்பத்திரிகள், நட்சத்திர ஓட்டல்கள், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப்பொருள் ஆய்வு மையங்கள், பெரிய கேட்டரிங் நிறுவனங்களில் நியூட்ரிஷியன்களுக்கும், டயட்டீஷியன்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஐதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிஷன் கல்வி நிறுவனம் இத்துறையில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.