உணவு மற்றும் பானங்கள் தயாரித்தலுக்குத் தேவைப்படும் திறன் மற்றும் அறிவு வளர்க்கும் விதமாக இத்துறைப் பாடங்கள் அமைகின்றன. பிரன்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், மனிதவள மேம்பாடு, ஹோட்டல் மற்றும் கேட்டரிங் சட்டம், சொத்துரிமை நிர்வாகம், கம்ப்யூட்டர் அறிவியல் உள்ளிட்ட துணைப்பிரிவுகளும் இப்பாடப்பிரிவில் இடம்பெறுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.