கம்ப்யூட்டர் துறையின் அடிப்படைகளான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பற்றிய கல்வி கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப்படுகிறது. செயற்கை அறிவு மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் உள்ளிட்ட கம்ப்யூட்டர் துறையின் பல்வேறுபட்ட பிரிவுகளின் அடிப்படை விஷயங்கள் இந்த படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. கம்ப்யூட்டர்களின் பலதரப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம், பைல்களை நிர்வகிப்பது போன்றவற்றில் செய்முறையுடனான சிறந்த பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.