ரசாயன தொழில்நுட்பம் எனப்படும் கெமிக்கல் டெக்னாலஜி தவிர்க்க முடியாத முக்கியத் துறை. உரம், பெட்ரோலியப் பொருட்கள், சிமென்ட், மருந்துகள், பெயிண்டுகள்,செயற்கை நூலிழைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவையான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்டவை இப்படிப்பின் முக்கிய அம்சங்கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் இருக்கும்.
பெட்ரோலிய, எரிவாயு சுத்திரிரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பார்மாசூட்டிக்கல்ஸ், உரத் தொழிற்சாலைகள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயின்ட் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்கள் புட் புராசசிங் நிறுவனங்கள், ரசாயன ஆலைகள் போன்றவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உண்டு. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கூட பணிகளில் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.