நாட்டில் உள்ள இளைஞர்களை ஈர்க்கும் முக்கியப் படிப்பு கம்ப்யூட்டர் அறிவியல் இன்ஜினியரிங். படித்து முடித்த திறமையாளர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் படித்து முடிக்கும் முன்பே வேலை. தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே, இன்ஜினியரிங் படிப்புகளைப் படிக்க நினைக்கும் மாணவர் கூட்டத்தின் முக்கிய விருப்பம் கம்ப்யூட்டர் அறிவியல் என்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம்,
செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
நான்கு ஆண்டு இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.