பி.ஏ. டிராயிங் அன்ட் பெயின்டிங் படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புத்தகம் புதிய ஆக்கச் சிந்தனைகள் கொண்டவராகவும், கடுமையாக உழைப்பவராகவும் இருக்க வேண்டும்.
பொதுவாக முழு நேர வகுப்பாக இருப்பின் இப்படிப்பு 3 ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். பகுதிநேர வகுப்பாக இருக்கும்பட்சத்தில் 5 ஆண்டுகள் கொண்டதாக இருக்கும். இப்படிப்பிற்கு புதுவிதமான பயிற்சியை தொடர்ந்து செய்து வர வேண்டும்.
ஓவியம், வரைதல், பெயின்டிங் என கலை ஆர்வம் கொண்டவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். கல்வி நிறுவனங்கள், கலை தொடர்பான நிறுவனங்கள் போன்றவற்றில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இப்படிப்பை வழங்குகின்றன. தமிழகத்தில் கலை மற்றும் கைவேலைப்பாடு கல்லூரி இப்படிப்பை வழங்குகிறது.
திறமையுடன் கடின உழைப்பை இத்துறையில் செலுத்தினால் பெரும் புகழ் அடையலாம்.