மதுரை அமெரிக்கன் கல்லூரியில், மதம், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று பெரிய பாடங்களையும் ஒன்றாக இணைத்து, பி.ஏ. படிப்பு நடத்தப்படுகிறது.
இந்தப் பாடத்திட்டத்தில், உலகின் பல்வேறான சமயங்கள் பற்றிய அறிமுகம் இருந்தாலும், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களைப் பற்றிய அதிகமான விஷயங்கள் உண்டு.
தத்துவப் பிரிவைப் பொறுத்தவரை, உலகின் அனைத்துவித தத்துவங்களைப் பற்றியும் விஷயங்கள் உண்டு.
இது ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பி.ஏ. படிப்பாகும். இப்படிப்பை முடித்த மாணவர்கள், முதுநிலையில், தத்துவம், அரசியல் அறிவியல், வரலாறு, உளவியல், ஆன்த்ரோபாலஜி மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பரவலான பல துறைகளில் இணைந்து மேற்படிப்பை மேற்கொள்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் சமயத்துறையில் ஈடுபடும் விருப்பம் கொண்ட மாணவர்களும் இப்படிப்பை மேற்கொள்கிறார்கள்.
இப்படிப்பிற்கான பட்டமானது, பி.ஏ - மதம், தத்துவம் மற்றும் சமூகவியல் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இப்படிப்பு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.