உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள், புரதங்கள் உள்ளிட்டவை பற்றியும் அவற்றின் இன்றியமையாமை பற்றியும் முழு
வதும் படிக்கும் துறை நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் எனப்படும். இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் சில:
* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை. இப்பல்கலைக்கழகத்தில் இத்துறையின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள்
வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு தீதீதீ.ட்டுதணடிதிஞுணூண்டிtதூ.ணிணூஞ்/
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன், ஐதராபாத் இக்கல்வி நிறுவனத்தில் நியூட்ரிசன் பிரிவில் முதுநிலை சர்டிபிகேட் படிப்பு உள்ளது. விவரங்களுக்கு தீதீதீ.ணடிணடிணஞீடிச்.ணிணூஞ்
* பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் நியூட்ரிசன், உணவு மற்றும் சர்விஸ் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு கற்றுத்தரப்படுகின்றன. இத்துறையின் கீழ் எம்.பில்., படிப்புகளும் இங்கு உள்ளன.விவரங்களுக்கு தீஞிஞி.ஞுஞீத.டிண
* அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை இங்கு முதுநிலை பட்டப்படிப்பில் இத்துறை சார்ந்த இரண்டு படிப்புகள் உள்ளன. இளநிலை படிப்பில் நியூட்ரிசன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் படிக்கலாம். விவரங்களுக்கு தீதீதீ.ச்திடிணச்ண்டடிடூடிணஞ்ச்ட்.ஞுஞீத
* எஸ்.என்.டீ.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை. இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் உணவு அறிவியல் மற்றும் நியூட்ரிசன் படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு தீதீதீ.ண்ணஞீt.ச்ஞி.டிண